கெக்கிராவ பகுதியில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு

கெக்கிராவ பகுதியில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு

கெக்கிராவ பகுதியில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

16 Feb, 2016 | 12:16 pm

அநுராதபுரம் – கெக்கிராவ வெல்யாய பகுதியில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் நேற்று (15) இரவு 8 மணியளவில் காட்டு யானையின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

கட்டமுடிச்சானை பகுதியைச் சேரந்த 46 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த பகுதியில் தொடர்ந்தும் காட்டு யானையின் நடமாட்டம் காணப்படுவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

குறித்த பகுதியில் நீண்ட காலமாக காட்டு யானைகளின் அட்டகாசம் காணப்பட்ட போதிலும் முதன் துறையாக யானைத் தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்