களனி கங்கையில் குளிக்கச்சென்று காணாமற்போன சிறுமிகளை தேடும் பணிகள் தீவிரம்

களனி கங்கையில் குளிக்கச்சென்று காணாமற்போன சிறுமிகளை தேடும் பணிகள் தீவிரம்

களனி கங்கையில் குளிக்கச்சென்று காணாமற்போன சிறுமிகளை தேடும் பணிகள் தீவிரம்

எழுத்தாளர் Staff Writer

16 Feb, 2016 | 10:19 am

வெல்லம்பிடி – சேதவத்த பிரதேசத்தில் களனி கங்கையில் குளிக்கச்சென்று காணாமற்போன 2 சிறுமிகள் தொடர்பில் தொடர்ந்தும் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபடுவதாக கடற்படை தெரிவித்துள்ளது.

ஆற்றில் குளிப்பதற்குச் சென்ற 14 வயதான மூன்று பாடசாலை மாணவிகளில் இருவர் நீரில் மூழ்கியுள்ளதுடன், ஒருவரை அருகில் இருந்த ஒருவர் காப்பாற்றியுள்ளார்.

வெல்லம்பிடிய பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்தவரின் உறவினர்களான இவர்கள் அவரது வீட்டில் இடம்பெற்ற புன்னியதானத்தில் கலந்து கொள்வதற்காக வந்துள்ளனர்.

காலி எல்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 2 மாணவிகளே இவ்வாறு காணாமற்போயுள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்