களனி ஆற்றில் குளிக்கச் சென்று காணாமற்போயிருந்த சிறுமிகள் இருவரின் சடலங்கள் மீட்பு

களனி ஆற்றில் குளிக்கச் சென்று காணாமற்போயிருந்த சிறுமிகள் இருவரின் சடலங்கள் மீட்பு

எழுத்தாளர் Bella Dalima

16 Feb, 2016 | 5:37 pm

வெல்லம்பிட்டிய, சேதவத்தை பகுதியில் களனி ஆற்றில் குளிக்கச் சென்ற நிலையில் காணாமற்போன இரண்டு சிறுமிகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

சிறுமிகள் இருவரில் ஒருவரது சடலம் இன்று காலை மீட்கப்பட்டதுடன், மற்றைய சிறுமியின் சடலம் பகல் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

களனி ஆற்றில் நேற்று (15) குளிக்கச் சென்றிருந்த 3 சிறுமிகள் நீரில் மூழ்கிய நிலையில், அதில் ஒருவர் மீட்கப்பட்டார்.

காணாமற்போன மற்றைய இரண்டு சிறுமிகளையும் தேடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில், இன்று அவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்