உள்ளூராட்சி மன்ற எல்லை நிர்ணயம் தொடர்பில் முறைப்பாடுகளை 20 ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்யவும்

உள்ளூராட்சி மன்ற எல்லை நிர்ணயம் தொடர்பில் முறைப்பாடுகளை 20 ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்யவும்

உள்ளூராட்சி மன்ற எல்லை நிர்ணயம் தொடர்பில் முறைப்பாடுகளை 20 ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்யவும்

எழுத்தாளர் Staff Writer

16 Feb, 2016 | 8:36 am

உள்ளூராட்சி மன்றங்களின் எல்லை நிர்ணயம் தொடர்பில் மக்களின் முறைப்பாடுகள் மற்றும் மேன்முறையீடுகளை எதிர்வரும் 20 ஆம் திகதிக்கு பின்னர் கையேற்கப் போவதில்லை என இதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழு தெரிவித்துள்ளது.

குறித்த முறைப்பாடுகளை முன்வைப்பதற்கான கால எல்லை கடந்த 30 ஆம் திகதியுடன் நிறைவடைந்த நிலையில் தொடர்ந்தும் உள்ளூராட்சி மன்றங்களின் எல்லை நிர்ணயம் தொடர்பில் மக்களின் முறைப்பாடுகள் மற்றும் மேன்முறையீடுகள் கிடைத்த வண்ணமுள்ளதாக குறித்த குழுவின் செயலாளர் சுபத்ராம வல்பொல தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் உள்ளூராட்சி மன்றங்களின் எல்லை நிர்ணயம் தொடர்பில் மக்களின் முறைப்பாடுகள் மற்றும் மேன்முறையீடுகள் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை முன்வைக்க முடியும் எனவும் தமது குழுவின் நடவடிக்கைகளை விரைவில் நிறைவு செய்ய எண்ணியுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் சுபத்ராம வல்பொல மேலும் குறிப்பிட்டுள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்