அரசியலமைப்புத் திருத்தம்: யாழில் இன்றும் மக்களின் கருத்துக்கள் கேட்டறியும் நடவடிக்கை முன்னெடுப்பு

அரசியலமைப்புத் திருத்தம்: யாழில் இன்றும் மக்களின் கருத்துக்கள் கேட்டறியும் நடவடிக்கை முன்னெடுப்பு

எழுத்தாளர் Staff Writer

16 Feb, 2016 | 9:50 am

அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாக மக்களின் கருத்துக்களை கேட்டறியும் குழுவினர் இன்று (15) இரண்டாவது நாளாகவும் யாழ்குடா நாட்டில் மக்களின் கருத்துக்களை கேட்டறியப்பட்டு வருகின்றது.

யாழ். மாவட்ட செயலகத்தில் காலை 9.30 மணி முதல் மக்களின் கருத்துக்களை கேட்டறியும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.

நேற்றைய அமர்வில் அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள்,சிவில் சமூக அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டு தமது கருத்துக்களை தெரிவித்ததாக அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாக மக்களின் கருத்துக்களை கேட்டறியும் குழுவின் தலைவர் லால் விஜேனாயக்க கூறினார்.

அத்துடன் 80 இற்கும் மேற்பட்டோரின் கருத்துக்களை நேற்றைய தினம் பதிவு செய்ய முடிந்ததாக அவர் குறிப்பிட்டார்.

பல்வேறு சிவில் அமைப்புக்கள் தமது கருத்துக்களை தெரிவிப்பதற்கு அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாக மக்களின் கருத்துக்களை கேட்டறியும் குழுவிற்கு விருப்பத்தை தெரிவித்துள்ளதாக லால் விஜேநாயக்க கூறினார்.

அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் மீதான பொதுமக்கள் யோசனைகளை கேட்டறிய 20 உறுப்பினர்களை கொண்ட குழுவொன்று உத்தேச அரசியலமைப்பு சீர்திருத்தங்களுக்கான முன்மொழிவுகளை மக்களிடமிருந்து பெற்றுக்கொள்வதற்காக அமைச்சரவையின் அங்கிகாரத்துடன் நியமிக்கப்பட்டது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்