ஶ்ரீ.சு.கட்சியின் சில உறுப்பினர்கள் செயற்பட்ட விதம் தொடர்பில் ​வெட்கப்படுவதாக சந்திரிக்கா தெரிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

13 Feb, 2016 | 7:55 am

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சில உறுப்பினர்கள் தமது கட்சியின் கண்ணியம் மற்றும் பாரம்பரியத்தை மறந்து அண்மையில் பாராளுமன்றத்தில் செயற்பட்ட விதம் தொடர்பில் தாம் வெட்கமடைவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

கடந்த 9 ஆம் திகதி அரசாங்கத்தால் சமர்பிக்கப்பட்ட சட்டம் தொடர்பில் பெண் என்ற ரீதியில் மகிழ்ச்சியடைவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை பெண்களின் விடிவுக்காக வரலாற்று முக்கியத்தும் வாய்ந்த பிரேரணையொன்று பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் உள்ளடக்கப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் அரசியல் சந்தர்ப்பவாதத்தை நிறைவேற்றுவதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சி, பெண்கள் சமூகத்தை இழிவுபடுத்தும் செயல் என, முன்னாள் ஜனாதிபதி விடுத்துள்ள அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்