லிந்துலை ஶ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் திருட்டு

லிந்துலை ஶ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் திருட்டு

எழுத்தாளர் Staff Writer

13 Feb, 2016 | 1:21 pm

தலவாக்கலை, லிந்துலை பகுதியில் அமைந்துள்ள ஶ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

லிந்துலை, மட்டுக்கலை மேற்பிரிவு தோட்டத்திலுள்ள ஶ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் பூட்டு அடையாளந் தெரியாதோரால் நேற்றிரவு உடைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

ஆலய விக்கிரகங்களில் அணிவிக்கப்பட்டிருந்த பெறுமதியான தங்காபரணங்கள் மற்றும் ஆலய உண்டியலில் இருந்த பணம் என்பனவும் கொள்ளையிடப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

கொள்ளையிடப்பட்ட தங்காபரணங்களின் பெறுமதி இதுவரை மதிப்பீடு செய்யப்படவில்லை.

சம்பவம் தொடர்பில் தகவல் வழங்கப்பட்டதை அடுத்து, லிந்துலை பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்