முழு நாட்டையும் ஆயுதக் குழுக்களிடமிருந்து மீட்பதாக சிரிய ஜனாதிபதி சூளுரை

முழு நாட்டையும் ஆயுதக் குழுக்களிடமிருந்து மீட்பதாக சிரிய ஜனாதிபதி சூளுரை

முழு நாட்டையும் ஆயுதக் குழுக்களிடமிருந்து மீட்பதாக சிரிய ஜனாதிபதி சூளுரை

எழுத்தாளர் Staff Writer

13 Feb, 2016 | 11:35 am

முழு நாட்டையும் ஆயுதக்குழுக்களிடம் இருந்து மீட்பதாக சிரிய ஜனாதிபதி பஷர் அல் அசாத் சூளுறைத்துள்ளார்.

பிராந்திய நாடுகளும் இவ்விடயத்தில் தொடர்பு பட்டிருப்பதால் தமக்கு எதிரான தரப்பினரை தோற்கடிப்பதில் தாமதம் ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சமாதான பேச்சுவார்த்தைகளுக்கு இணங்குவதாக தெரிவித்த அசாட் பேச்சுவார்த்தைகள், பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தை நிறுத்துவதற்கான அறிகுறியாக அமையாது என சுட்டிக்காட்டியுள்ளார்.

சிரியாவில் இடம்பெறும் மோதல்களை ஒரு வார காலத்துக்குள் முடிவுக்கு கொண்டுவர அழுத்தம் கொடுக்க வேண்டும் என உலக நாடுகள் தெரிவித்துள்ளன.

இதேவேளை முற்றுகையிடப்பட்டுள்ள பகுதிகளில் வாழும் மக்களுக்கு அடுத்த 24 மணித்தியாலங்களுக்குள் நிவாரண உதவிகளை வழங்கவுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

13.5 மில்லியன் மக்கள் நிவாரண உதவிகள் இன்றி உள்ளதாகவும் ஐ.நா குறிப்பிட்டுள்ளது.

கடந்த 5 வருடங்களாக சிரியாவில் தொடரும் உள்நாட்டு கிளர்ச்சிகளால் 250,000 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 11 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்