தெலுங்கிலும் பாடகராக அறிமுகமாகும் ஏ.ஆர்.ரஹ்மானின் மகன்

தெலுங்கிலும் பாடகராக அறிமுகமாகும் ஏ.ஆர்.ரஹ்மானின் மகன்

தெலுங்கிலும் பாடகராக அறிமுகமாகும் ஏ.ஆர்.ரஹ்மானின் மகன்

எழுத்தாளர் Staff Writer

13 Feb, 2016 | 12:24 pm

ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் ஏ.ஆர்.ஆர்.அமீன் சிறு வயதிலேயே சிறப்பாக பாடும் திறமை பெற்றிருக்கிறார். இவர் கடந்த ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘ஓ காதல் கண்மணி’ படத்தில் ஒரு பாடல் பாடி இருக்கிறார். இப்போது முதல்முறையாக ‘நிர்மலா கான்வென்ட்’ என்ற தெலுங்கு படத்திலும் ஒரு பாடல் பாடி இருக்கிறார்.

நாகார்ஜூனா தயாரித்துள்ள இந்த படத்திற்கு தெலுங்கு இசை அமைப்பாளர் கோட்டியின் மகன் ரோஷன் இசை அமைப்பாளராக அறிமுகமாகியிருக்கிறார்.

அவரது இசையில் இந்த பாடலை அமீன் பாடியுள்ளார். பாடல் சிறப்பாக வந்திருப்பதாக படத் தயாரிப்பாளர் மற்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்