தெற்கு அதிவேக வீதியூடாக அதிக வேகத்தில் வாகனம் செலுத்திய 19,240 சாரதிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்

தெற்கு அதிவேக வீதியூடாக அதிக வேகத்தில் வாகனம் செலுத்திய 19,240 சாரதிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்

தெற்கு அதிவேக வீதியூடாக அதிக வேகத்தில் வாகனம் செலுத்திய 19,240 சாரதிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்

எழுத்தாளர் Staff Writer

13 Feb, 2016 | 11:07 am

தெற்கு அதிவேக வீதியூடாக அதிக வேகத்தில் வாகனம் செலுத்தியமைக்காக கடந்த வருடத்தில் 19,240 சாரதிகளுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

இந்த அதிவேக வீதியில் ஏனைய வாகன குற்றங்கள் தொடர்பில் 13,000 அதிகமான சாரதிகள் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, கடந்த வருடத்திற்குள் கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதியூடாக அதிக வேகத்தில் வாகனம் செலுத்திய 11,497 சாரதிகளுக்கு எதிராகவும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதியில் இடம்பெற்றுள்ள ஏனைய வாகனக் குற்றங்கள் குறித்து 6,924 சாரதிகள் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்