தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தை அண்மித்த காட்டுப் பகுதியில் தீ பரவியுள்ளது

தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தை அண்மித்த காட்டுப் பகுதியில் தீ பரவியுள்ளது

தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தை அண்மித்த காட்டுப் பகுதியில் தீ பரவியுள்ளது

எழுத்தாளர் Staff Writer

13 Feb, 2016 | 11:14 am

தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தை அண்மித்த காட்டுப் பகுதியில் நேற்று (12) பிற்பகல் தீ பரவியுள்ளது.

இதுகுறித்து தகவல் வழங்கப்பட்டதை அடுத்து, லிந்துலை நகர சபை மற்றும் பிரதேச மக்களின் உதவியுடன் தலவாக்கலை பொலிஸார் தீயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளனர்.

தீயினால் சுமார் அரை ஏக்கர் நிலப்பரப்பிற்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

ஆயினும், எவருக்கும் பாதிப்புகள் ஏற்படவில்லை என்பதுடன், தீ பரவியமைக்கான காரணத்தை கண்டறியும் விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை, மஸ்கெலியா, காட்டு மஸ்கெலியா தோட்டத்தின் லெங்கா பிரிவிற்கு அருகிலுள்ள பற்றைக்காட்டிற்கும் விஷமிகள் சிலர் நேற்றிரவு தீவைத்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

தீயினால் சுமார் 100 ஏக்கருக்கும் அதிக பற்றைக்காடு எரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீ தொடர்ந்தும் பரவிவருவதாகவும், தோட்ட நிர்வாகம், பிரதேச மக்கள் மற்றும் பொலிஸார் இணைந்து தீயைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக எமது செய்தியாளர் மேலும் குறிப்பிட்டார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்