ஜனவரி மாதத்தில்  இடம்பெற்ற வாகன விபத்துக்களினால் 191 பேர் உயிரிழப்பு

ஜனவரி மாதத்தில் இடம்பெற்ற வாகன விபத்துக்களினால் 191 பேர் உயிரிழப்பு

ஜனவரி மாதத்தில் இடம்பெற்ற வாகன விபத்துக்களினால் 191 பேர் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

13 Feb, 2016 | 10:35 am

கடந்த ஜனவரி மாதத்தில் மாத்திரம் இடம்பெற்றுள்ள வாகன விபத்துகளினால் 191 பேர் உயிரிழந்துள்ளதாக வீதிப் பாதுகாப்பிற்கான தேசிய சபை சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த மாதத்தில் 198 வாகன விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக அந்த சபையின் தலைவர் டொக்டர் சிசிர கோதாகொட குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வருடத்தில் மொத்தமாக 2,801 பேர் வாகன விபத்துக்களினால் உயிரிழந்துள்ளனர்.

இந்த எண்ணிக்கையானது மாதாந்தம் சுமார் 200 பேர் வரை வாகன விபத்துக்களினால் உயிரிழப்பதை எடுத்துக் காட்டுவதாக வீதிப் பாதுகாப்பிற்கான தேசிய சபை சுட்டிக்காட்டுகின்றது.

ஆயினும், இந்த வருடம் ஜனவரி மாதத்தில் விபத்துகளினால் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகளின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்துள்ளதாக சபையின் தலைவர் கூறியுள்ளார்.

மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகள் மற்றும் லொறிகளே அதிகளவில் விபத்திற்குள்ளாகியிருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்