சமூக வலைத்தளங்களில் ஜனாதிபதி, பிரதமரைத் தூற்றி கொலை மிரட்டல் விடுக்கின்றனர் – ருவன் விஜேவர்த்தன

சமூக வலைத்தளங்களில் ஜனாதிபதி, பிரதமரைத் தூற்றி கொலை மிரட்டல் விடுக்கின்றனர் – ருவன் விஜேவர்த்தன

எழுத்தாளர் Bella Dalima

13 Feb, 2016 | 7:49 pm

சமூக வலைத்தளங்களினால் பாதகமான நிலை ஏற்படுவதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தன தெரிவித்தார்.

கம்பஹாவில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் தெரிவித்ததாவது,

[quote]சமூக வலைத்தளங்களைப் பார்த்தால் உங்களுக்குத் தெரியும், ஜனாதிபதியையும் பிரதமரையும் தூற்றி, கொலை மிரட்டல் விடுக்கின்றனர். நாட்டின் ஜனாதிபதி ஒருவருக்கு, நாட்டின் தலைவர் ஒருவருக்கு மரண அச்சுறுத்தல் விடுத்திருப்பது சிறு சம்பவமல்ல. இந்த நாட்டில் உள்ள பிரஜைகளுக்கு யாராவது ஒருவர் மரண அச்சுறுத்தல் விடுப்பார்களாயின் அது பாரிய விடயமாகும். நாங்கள் இது தொடர்பில் கருத்திற்கொண்டு, பாதுகாப்பு அமைச்சு என்ற வகையில் செயற்படுகின்றோம். [/quote]


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்