சமூக சேவையாளர்கள் 500 பேருக்கு சமாதான நீதவான் பதவி வழங்க நீதியமைச்சு நடவடிக்கை

சமூக சேவையாளர்கள் 500 பேருக்கு சமாதான நீதவான் பதவி வழங்க நீதியமைச்சு நடவடிக்கை

சமூக சேவையாளர்கள் 500 பேருக்கு சமாதான நீதவான் பதவி வழங்க நீதியமைச்சு நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

13 Feb, 2016 | 1:52 pm

நாட்டில் சமூக சேவைக்கு ஆர்வம் காட்டுகின்ற சமூக சேவையாளர்கள் 500 பேருக்கு சமாதான நீதவான் பதவி வழங்குவதற்கு நீதியமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

எதிர்வரும் 16 ஆம் திகதி புத்தசாசன அமைச்சில் இந்த பதவி நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

புதிய நியமனங்களை பெற்றுக்கொள்ள உள்ளவர்கள், நாட்டின் சகல தேர்தல் தொகுதிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

சமூகத் தலைவர்களின் சேவைகளைக் கருத்திற்கொண்டு பிரதேச நீதிமன்ற அதிகாரப் பிரிவு, மாவட்டம் மற்றும் அகில இலங்கை என்ற ரீதியில் சமாதான நீதவான் பதவிகள் வழங்கப்படவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் மேலும் கூறியுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்