கொழும்பில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது

கொழும்பில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது

கொழும்பில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது

எழுத்தாளர் Staff Writer

13 Feb, 2016 | 10:43 am

கொழும்பின் வெலிக்கடை மற்றும் மாளிகாவத்தை பகுதிகளில் ஹெரோயின்போதைப்பொருளுடன் 2 சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

வெலிக்கடை, ஒபேசேகரபுர பகுதியில் 4 கிராமும் 100 மில்லி கிராமும் நிறையுடைய ஹெரோயினுடன் சந்தேகநபர் ஒருவர் நேற்று (12) மாலை கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

வெலிக்கடை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, மேற்கொண்ட தேடுதலின்போதே சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, மாளிகாவத்தை பகுதியிலும் ஹெரோயின் போதைப்பொருளுடன் மற்றுமொரு சந்தேகநபர் நேற்றிரவு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந்த நபரிடமிருந்து 3 கிராமும், 60 மில்லிகிராமும் நிறையுடைய போதைப்பொருளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இரண்டு சந்தேகநபர்களையும் புதுக்கடை மற்றும் மாளிகாகந்தை நீதவான்கள் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்துவதற்கு பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்