களனிவெளி மார்க்கத்திலான ரயில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது

களனிவெளி மார்க்கத்திலான ரயில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது

களனிவெளி மார்க்கத்திலான ரயில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது

எழுத்தாளர் Staff Writer

13 Feb, 2016 | 8:36 am

களனிவெளி மார்க்கத்திலான ரயில் போக்குவரத்து இன்றும் (13), நாளையும் (14) மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

பேஸ்லைன் ரயில் கடவைக்கு அருகில் இடம்பெறும் புனரமைப்பு நடவடிக்கைகள் காரணமாகவே அந்த மார்க்கத்திலான ரயில் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் குறிப்பிட்டுள்ளது.

இதன் பிரகாரம் களனிவெளி மார்க்கத்தில் காலை வேளையில் வழமையாக முன்னெடுக்கப்படும் 8 ரயில் போக்குவரத்து சேவைகள், இன்றும் நாளையும் 3 ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

அவிசாவளையில் இருந்து புறப்படும் ரயில், பேஸ்லைன் ரயில் நிலையம் வரை வரையறுக்கப்பட்டுள்ளது.

இந்த காலப்பகுதிக்குள் கொழும்பு – கோட்டையிலிருந்து களனிவெளி மார்க்கத்திலான ரயில் போக்குவரத்துகள் இடம்பெறமாட்டாது என்றும் ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் அறிவித்துள்ளது.

அத்துடன், அவிசாவளை நோக்கிப் பயணிக்கும் ரயில்கள், பேஸ்லைன் ரயில் நிலையத்திலிருந்து பயணத்தை முன்னெடுப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்