எய்ட்ஸ் நோயாளியின் உடல் உறுப்புகளை மற்றொரு நோயாளிக்கு பொருத்தி சாதனை

எய்ட்ஸ் நோயாளியின் உடல் உறுப்புகளை மற்றொரு நோயாளிக்கு பொருத்தி சாதனை

எய்ட்ஸ் நோயாளியின் உடல் உறுப்புகளை மற்றொரு நோயாளிக்கு பொருத்தி சாதனை

எழுத்தாளர் Bella Dalima

13 Feb, 2016 | 5:25 pm

அமெரிக்காவில் முதன்முறையாக எய்ட்ஸ் நோயாளிகளுக்கு உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நடந்துள்ளது.

அமெரிக்காவில் மட்டும் 1,22,000 எய்ட்ஸ் நோயாளிகள் மாற்று உடல் உறுப்புகள் கிடைக்காமல் காத்திருக்கின்றனர்.

அக்குறையைப் போக்க, எய்ட்ஸ் நோயாளிகளிடமிருந்தே உடல் உறுப்புகளைப் பெற்று அதனை மற்றொரு எய்ட்ஸ் நோயாளிக்குப் பொருத்துவது தொடர்பில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

ஜோன்ஸ் ஹோப் கின்ஸ் பல்கலைக்கழக அறுவை சிகிச்சை நிபுணர்கள் இந்த ஆய்வில் ஈடுபட்டனர்.

இந்த ஆய்வை அடுத்து, எய்ட்ஸ் நோயாளி ஒருவரிடமிருந்து சிறுநீரகம் மற்றும் கல்லீரலை தானமாகப் பெற்று மற்றொரு நோயாளிக்கு அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டது.

இதன் மூலம் அமெரிக்காவில் ஆண்டுக்கு 500 முதல் 600 எய்ட்ஸ் நோயாளிகளின் வீணாகும் உடல் உறுப்புகள் சராசரியாக 1000 பேரின் உயிரைக் காக்கும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்