ஊழியர்கள் பற்றாக்குறை: விநியோகிக்கப்படாத நிலையில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான கடிதங்கள்

ஊழியர்கள் பற்றாக்குறை: விநியோகிக்கப்படாத நிலையில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான கடிதங்கள்

ஊழியர்கள் பற்றாக்குறை: விநியோகிக்கப்படாத நிலையில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான கடிதங்கள்

எழுத்தாளர் Staff Writer

13 Feb, 2016 | 8:25 am

விநியோகிப்பதற்கு தாமதம் ஏற்பட்டுள்ள சுமார் 150,000 கடிதங்கள் மத்திய தபால் பரிமாற்றத்தில் தேங்கியுள்ளதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி சுட்டிக்காட்டியுள்ளது.

இவற்றுள் சுமார் ஒரு இலட்சம் சாதாரண கடிதங்களும் காணப்படுவதாக முன்னணியின் இணை ஏற்பாட்டாளர் சிந்தக்க பண்டார குறிப்பிட்டார்.

சுமார் 50,000 வெளிநாட்டுக் கடிதங்களும் மத்திய தபால் பரிமாற்றத்தில் தேங்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த கடிதங்களை விரைவில் பொதுமக்களுக்கு விநியோகிப்பதற்கான ஊழியர்கள் மத்திய தபால் பரிமாற்றத்தில் இல்லையென ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியின் இணை ஏற்பாட்டாளர் கூறினார்.

மத்திய தபால் பரிமாற்றத்திற்கு நாளாந்தம் சுமார் இரண்டு இலட்சம் முதல் இரண்டரை இலட்சம் வரையான பதிவுத் தபால்கள் வந்துசேர்வதாகவும் தெரிவிக்கப்ப்ட்டுள்ளது.

இந்த நிலைமையின் கீழ், மத்திய தபால் பரிமாற்றத்தில் இரண்டாம் நிலை தபால் உத்தியோகத்தர்கள் 155 பேருக்கான வெற்றிடம் நிலவுவதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியின் இணை ஏற்பாட்டாளர் சிந்தக பண்டார சுட்டிக்காட்டினார்.

இந்த விடயம் குறித்து தபால் மாஅதிபர் ரோஹண அபேரத்னவிடம் நியூஸ்பெஸ்ட் வினவியது.

மத்திய தபால் பரிமாற்றத்தில் நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதால் மற்றும் ஊழியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான செயற்பாடுகள் குறித்து தபால் தொழிற்சங்கங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் கலந்துரையாடியுள்ளதாக தபால் மாஅதிபர் இதன் போது கூறினார்.

எவ்வாறாயினும், மத்திய தபால் பரிமாற்றத்தில் நிலவும் பிரச்சினைகளுக்கு எதிர்வரும் புதன்கிழமைக்குள் உரிய தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தபால் சேவைகள் அமைச்சர் அப்துல் ஹலீம் தெரிவித்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்