அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் பொதுமக்களிடமிருந்து 2000 யோசனைகள்

அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் பொதுமக்களிடமிருந்து 2000 யோசனைகள்

அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் பொதுமக்களிடமிருந்து 2000 யோசனைகள்

எழுத்தாளர் Staff Writer

13 Feb, 2016 | 8:10 am

அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் பொதுமக்களிடமிருந்து இதுவரை சுமார் 2000 யோசனைகள் கிடைத்துள்ளதாக அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் தொடர்பில் மக்களின் யோசனைகளை கேட்டறியும் குழு தெரிவித்துள்ளது.

வெவ்வேறு மாவட்டங்களில் முன்னெடுக்கப்பட்ட பொதுமக்கள் சந்திப்புகளின்போதும், தொலைநகல் மற்றும் மின்னஞ்சல் மூலமாகவும் இந்த யோசனைகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அந்த குழுவின் தலைவரான சட்டத்தரணி லால் விஜேநாயக்க குறிப்பிட்டார்.

அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் மின்னஞ்சல் ஊடாக மாத்திரம் 600 யோசனைகள் கிடைத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட வேண்டிய விடயங்கள் மற்றும் தங்களின் நிரந்தர பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கும் விடயங்கள் குறித்தும் யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணி லால் விஜேநாயக்க தெரிவித்தார்.

நிகழ்கால அரசியல் நிலைமைகள் குறித்து மக்கள் மத்தியில் காணப்படும் வெறுப்புணர்வும் தமக்கு கிடைக்கப்பெற்றுள்ள கருத்துகள் மற்றும் யோசனைகள் ஊடாக தெரியவந்துள்ளதாக அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் மக்களின் யோசனைகளை கேட்டறியும் குழுவின் தலைவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, மக்களின் யோசனைகளை கேட்டறியும் இந்த குழுவின் அமர்வுகள் முல்லைத்தீவு மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் 2 ஆம் நாளாக இன்றும் முன்னெடுக்கப்படவுள்ளன.

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நேற்று (12) இடம்பெற்ற அமர்வில், பொதுமக்கள் சுமார் 40 பேரும், மாதர் சங்கங்கள் மற்றும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் தனித்தும், கூட்டாகவும் தங்களின் யோசனைகளை பதிவு செய்ததாக எமது பிராந்திய செய்தியாளர் கூறினார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்