அரசியலமைப்புத் திருத்தம்: முல்லைத்தீவில் இன்றும் மக்களின் கருத்துக்கள் பெறப்பட்டன

அரசியலமைப்புத் திருத்தம்: முல்லைத்தீவில் இன்றும் மக்களின் கருத்துக்கள் பெறப்பட்டன

எழுத்தாளர் Bella Dalima

13 Feb, 2016 | 10:00 pm

அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் மக்களின் கருத்துக்களைக் கேட்டறியும் அமர்வு இரண்டாவது நாளாக இன்றும் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

இதன்போது தனியாகவும், குழுவாகவும் கருத்துக்களை முன்வைப்பதற்கு மக்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது

இன்றைய அமர்வில் கருத்துத் தெரிவித்த பெரும்பாலான மக்கள், வடக்கு – கிழக்கு இணைக்கப்பட வேண்டும், சமஷ்டி அடிப்படையில் தீர்வு வழங்கப்பட வேண்டும் என கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்