10 மாவட்டங்களில் டெங்கு ஒழிப்புத்திட்டம் ஆரம்பம்

10 மாவட்டங்களில் டெங்கு ஒழிப்புத்திட்டம் ஆரம்பம்

10 மாவட்டங்களில் டெங்கு ஒழிப்புத்திட்டம் ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

11 Feb, 2016 | 7:41 am

டெங்கு அபாய வலயங்களாக காணப்படும் 10 மாவட்டங்களில் இன்று முதல் நுளம்பு ஒழிப்பு வேலைத்திட்டம் இன்று முதல் அமுல்படுத்தப்படவுள்ளது.

யாழ்ப்பாணம், வவுனியா, மட்டக்களப்பு , புத்தளம் , அம்பாறை , கொழும்பு , கம்பஹா , களுத்துறை, கேகாலை மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் ஒழிப்பு பிரிவின் விசேட வைத்திய நிபுனர் பபா பலிஹவடன தெரிவித்துள்ளார்

குறித்த 10 மாவட்டங்ளிலும் இன்றிலுருந்து தொடர்ந்து மூன்று நாட்களுக்கு டெங்கு அவதான வலயங்கள் பரிசோதனைக்குட்படுத்தி நுளம்பு குடம்பிகளை ஒழிக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

முப்படையினர் பொலிஸார் மற்றும் சுற்றாடல் அமைச்சு உள்ளிட்ட மாகாண அமைச்சுகளையும் ஒன்றினைத்து டெங்கு ஒழிப்பு செயற்பாடு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் விசேட வைத்திய நிபுணர் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களை விட இந்த வருடத்தின் இது வரையான காலப்பகுதியில் டெங்கு காயச்சலினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக கடந்த ஒரு மாதத்தில் மாத்திரம் நாடாளவிய ரீதியில் ஐயாயிரம் பேர் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பட்டுள்ளது.

அவர்களில் 8 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்