வெல்லம்பிட்டிய ​கொலைச்சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை

வெல்லம்பிட்டிய ​கொலைச்சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை

வெல்லம்பிட்டிய ​கொலைச்சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை

எழுத்தாளர் Staff Writer

11 Feb, 2016 | 6:50 am

வெல்லம்பிட்டியவில் மூவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் பலரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.

எனினும் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் எவரும் – இதுவரை கைது செய்யப்படவில்லை எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு பல பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

நேற்று முன் தினம் நள்ளிரவு வெல்லம்பிட்டிய பகுதியில் இடம் பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் முவர் காயமடைந்த நிலையில் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தனர்.

19,24, மற்றும் 49 வயதான மூவரே சம்பவத்தில் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்