விளையாட்டு வீரர்களுக்கான ஊக்குவிப்புத் திட்டமொன்றை ஸ்தாபிக்கத் திட்டம்

விளையாட்டு வீரர்களுக்கான ஊக்குவிப்புத் திட்டமொன்றை ஸ்தாபிக்கத் திட்டம்

விளையாட்டு வீரர்களுக்கான ஊக்குவிப்புத் திட்டமொன்றை ஸ்தாபிக்கத் திட்டம்

எழுத்தாளர் Bella Dalima

11 Feb, 2016 | 10:20 pm

விளையாட்டு வீரர்களுக்கான ஊக்குவிப்புத் திட்டமொன்றை ஸ்தாபிக்கவுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

இந்தியாவில் நடைபெறுகின்ற 12 ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டுள்ள அமைச்சர் நியூஸ்பெஸ்ட்டிற்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலில் இதனைக் கூறினார்.

அமைச்சர் தெரிவித்ததாவது,

[quote]தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை வென்றவர்களில் அநேகமானவர்கள் மிகவும் கஷ்டங்களுக்கு மத்தியிலேயே வாழ்கின்றனர். அவர்களுக்கு தொழில் இல்லை. அவர்கள் அடையாளம் காணப்படவில்லை. இலங்கைக்குச் சென்றதும் அந்த அனைத்து வீர, வீராங்கனைகளுடனும் நான் தனிப்பட்ட முறையில் கலந்துரையாடி, அவர்கள் வருமானத்தை ஈட்டுவதற்கு ஏதுவாக தனியார் துறையினருடனும் பேச்சுவார்த்தை நடத்தி தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பேன். [/quote]

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்