வடகொரியா இராணுவ தளபதிக்கு மரண தண்டனை

வடகொரியா இராணுவ தளபதிக்கு மரண தண்டனை

வடகொரியா இராணுவ தளபதிக்கு மரண தண்டனை

எழுத்தாளர் Staff Writer

11 Feb, 2016 | 11:41 am

உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி ஐதரசன் குண்டு பரிசோதனை, கண்டம்விட்டு கண்டம் பாயும் நெடுந்தூர நவீன ஏவுகணை பரிசோதனை என அடுத்தடுத்து அத்துமீறல்களில் ஈடுபட்டுவரும் வடகொரியா அந்நாட்டின் இராணுவ தலைமை தளபதியை ரகசியமாக கொன்று விட்டதாக தென்கொரியா குற்றம்சாட்டியுள்ளது.

பிரபல செய்தி நிறுவனங்களுக்கு கிடைத்த நம்பத்தகுந்த தகவல்களின்படி, இலஞ்சம் மற்றும் ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்டதால் கொரியா மக்கள் இராணுவத்தின் தலைமை தளபதியாக இருந்த ரி யாங் கில்-லுக்கு சமீபத்தில் ரகசியமாக மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக தெரியவந்துள்ளது.

வடகொரியாவின் ஜனாதிபதியாக இருக்கும் கிம் ஜாங் உன் இன் மாமாவான ஜங் சாங் தாயேக் என்பவர் முன்னாள் ஜனாதிபதி ஆட்சிக்காலத்தின்போது நாட்டிலேயே இரண்டாவது அதிகார மையமாக கருதப்பட்டார். இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டின் பேரில் இவருக்கும் கடந்த 2013 ஆம் ஆண்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்