யோஷித ராஜபக்ஸ தொடர்ந்து விளக்கமறியலில்

யோஷித ராஜபக்ஸ தொடர்ந்து விளக்கமறியலில்

எழுத்தாளர் Staff Writer

11 Feb, 2016 | 12:51 pm

முன்னாள் ஜனாதிபதியின் மகன் யோஷித ராஜபக்ஸ உள்ளிட்ட ஐந்து சந்தேகநபர்களின் விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.

யோஷித ராஜபக்ஸ உள்ளிட்ட ஐந்து சந்தேகநபர்களும், எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களை கடுவலை நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தியதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

சீ.எஸ்.என் தொலைக்காட்சி அலைவரிசையின் பணிப்பாளரான நிஷாந்த ரணதுங்க, ரொஹான் வெலிவிட்ட, அஷான் ரவிநாத் பெணர்டோ மற்றும் கவிஷான் திஸாநாயக்க ஆகியோரோ மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சீ.எஸ்.என. தொலைக்காட்சி அலைவரிசை ஆரம்பிக்கப்பட்ட போது இடம்பெற்றதாக கூறப்படும் மோசடி குறித்து பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.

இதனிடையே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கடுவலை நீதவான் நீதிமன்ற கட்டட வளாகத்திற்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்