புதிய சட்ட மாஅதிபராக சிரேஷ்ட மேலதிக சொலிஸ்டர் ஜெனரல் ஜயந்த ஜயசூரிய பதவிப்பிரமாணம்

புதிய சட்ட மாஅதிபராக சிரேஷ்ட மேலதிக சொலிஸ்டர் ஜெனரல் ஜயந்த ஜயசூரிய பதவிப்பிரமாணம்

எழுத்தாளர் Staff Writer

11 Feb, 2016 | 1:00 pm

புதிய சட்ட மாஅதிபராக சிரேஷ்ட மேலதிக சொலிஸ்டர் ஜெனரல் ஜயந்த ஜயசூரிய ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்

சட்ட மாஅதிபர் நியமனத்திற்கு மூவரது பெயர்கள் ஜனாதிபதியால் அரசியலமைப்பு பேரவைக்கு பரிந்துரை செய்யப்பட்டதை அடுத்து, அவர்களில் ஜயந்த ஜயசூரியவை புதிய சட்ட மாஅதிபராக நியமிப்பதற்கு அரசியலமைப்பு பேரவை நேற்று அனுமதி வழங்கியது.

ஜனாதிபதி சட்டத்தரணிகளான சுஹத கம்லத், ஜயந்த ஜயசூரிய மற்றும் கபில வைத்தியரத்ன ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்தன.

குருநாகல் மலியதேவ கல்லூரியின் பழைய மாணவரான ஜயந்த ஜயசூரிய, 1979 ஆம் ஆண்டு சட்டக் கல்லூரிக்குள் பிரவேசித்து, 1981 ஆம் ஆண்டு சட்டத்தரணியாக பதவிப்பிரமாணம் செய்தார்.

1983 ஆம் ஆண்டு சட்ட மாஅதிபர் திணைக்களத்தில் இணைந்த அவர், 2011 ஆம் ஆண்டு மேலதிக சொலிஸிட்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டார்.

அங்குலானை பொலிஸ் வழக்கு மற்றும் சதீப லக் ஷான் வழக்கு போன்றவற்றின் அரச சட்டத்தரணியாக இவர் ஆஜராகியிருந்தமை குறிப்பிடடத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்