பனி மூட்டம் காரணமாக  மத்தளையில் தரையிறக்கப்பட்ட விமானங்கள்

பனி மூட்டம் காரணமாக மத்தளையில் தரையிறக்கப்பட்ட விமானங்கள்

பனி மூட்டம் காரணமாக மத்தளையில் தரையிறக்கப்பட்ட விமானங்கள்

எழுத்தாளர் Staff Writer

11 Feb, 2016 | 2:07 pm

அதிக பனி மூட்டம் காரணமாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்படவிருந்த 3 விமானங்கள் மத்தளை சர்வதேச விமான நிலையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

துபாய், கட்டார் மற்றும் பீஜிங் ஆகிய விமான நிலையங்களிலிருந்து நாட்டிற்கு வருகை தந்த விமானங்களே இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலையத்தின் கடமைநேர முகாமையாளர் குறிப்பிட்டார்.

இன்று அதிகாலை 5 மணிக்கும் 6 மணிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் குறித்த 3 விமானங்களும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்படவிருந்ததாகவும், விமான நிலைய கடமைநேர முகாமையாளர் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்