நைஜீரியா தற்கொலைத் தாக்குதலில் 70 பேர் பலி

நைஜீரியா தற்கொலைத் தாக்குதலில் 70 பேர் பலி

நைஜீரியா தற்கொலைத் தாக்குதலில் 70 பேர் பலி

எழுத்தாளர் Staff Writer

11 Feb, 2016 | 11:34 am

ஆபிரிக்க நாடான நைஜீரியாவின் வடகிழக்குப் பகுதியில் உள்ள அகதிகள் முகாமில் 2 பெண் தற்கொலைக் குண்டுதாரிகள் நடத்திய தாக்குதலில் 70 பேர் பலியாகியுள்ளனர்.

தற்கொலைத் தாக்குதலுக்காக வந்திருந்த மற்றொரு பெண் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நைஜீரியாவில் செயல்படும் போகோ ஹராம் எனும் இயக்கத்தால் பாதிக்கப்பட்ட 50,000 பொதுமக்கள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அந்த முகாம் மீது தற்கொலைப்படைத் தாக்குதல் நடைபெற்றுள்ளதையடுத்து தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தாக்குதலில் பலத்த காயமடைந்த 78 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்