தனுஷ் படத்திலிருந்து ஷாம்லி விலகல்: பிரேமம் மெடோனா நடிக்கவுள்ளார்

தனுஷ் படத்திலிருந்து ஷாம்லி விலகல்: பிரேமம் மெடோனா நடிக்கவுள்ளார்

தனுஷ் படத்திலிருந்து ஷாம்லி விலகல்: பிரேமம் மெடோனா நடிக்கவுள்ளார்

எழுத்தாளர் Bella Dalima

11 Feb, 2016 | 5:10 pm

எதிர்நீச்சல், காக்கிச்சட்டை ஆகிய படங்களை இயக்கிய துரை செந்தில் குமார், அடுத்ததாக இயக்கும் கொடி படத்தில் தனுஷ், த்ரிஷா, ஷாம்லி போன்றோர் நடிப்பதாக முதலில் அறிவிக்கப்பட்டது.

இரட்டை வேடத்தில் தனுஷ் நடிக்கும் இப்படத்தில் த்ரிஷா, ஷாம்லி ஆகியோர் ஜோடியாக நடிப்பதாக இருந்தது.

ஆனால், கால்ஷீட் பிரச்சினை காரணமாக தற்போது இந்தப் படத்திலிருந்து ஷாம்லி விலகியுள்ளாராம்.

கொடி படப்பிடிப்பு ஒக்டோபர் மாதத்தில் ஆரம்பித்து டிசம்பரில் முடிவடைவதாக இருந்தது. ஆனால், படப்பிடிப்பு தாமதமானதால் தற்போது ஷாம்லியால் கொடி படத்தில் நடிக்கமுடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாம்.

வீரசிவாஜி, ஒரு மலையாளப் படம் என இரு படங்களில் நடிக்க வேண்டியுள்ளதால் கொடி படத்திலிருந்து ஷாம்லி விலகியுள்ளாராம்.

இதையடுத்து, பிரேமம் மலையாளப் படத்தில் நடித்த மடோனா, கொடி படத்தில் நடிக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மடோனா, விஜய் சேதுபதியுடன் இணைந்து காதலும் கடந்து போகும் படத்தில் நடித்துள்ளார்.

மடோனா, கொடி படத்தில் நடிப்பது குறித்த அதிகாரபூர்வமான தகவல் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்