சிறுமியை பலவந்தமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியவர் கைது

சிறுமியை பலவந்தமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியவர் கைது

சிறுமியை பலவந்தமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியவர் கைது

எழுத்தாளர் Bella Dalima

11 Feb, 2016 | 7:03 pm

பதினேழு (17) வயது சிறுமி ஒருவரை பலவந்தமாக விடுதி ஒன்றில் தடுத்து வைத்திருந்த சந்தேகநபர் கண்டியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சிறுமியின் பெற்றோரால் செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

சிறுமியை தடுத்துவைத்து பலவந்தமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

விடுதியிலிருந்த மற்றுமொரு பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்