கொலை மிரட்டல்: உயரதிகாரிகளுடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுக்கவுள்ளதாக சபாநாயகர் தெரிவிப்பு

கொலை மிரட்டல்: உயரதிகாரிகளுடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுக்கவுள்ளதாக சபாநாயகர் தெரிவிப்பு

கொலை மிரட்டல்: உயரதிகாரிகளுடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுக்கவுள்ளதாக சபாநாயகர் தெரிவிப்பு

எழுத்தாளர் Bella Dalima

11 Feb, 2016 | 7:17 pm

தொலைபேசியூடாக தமக்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டல் குறித்து பொலிஸ் உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுக்கவுள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய பாராளுமன்றத்தில் இன்று அறிவித்தார்.

இதுபற்றித் தமது பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும் சிரேஷ்ட அதிகாரிகளுக்கு நாளைய தினம் அறிவிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

கொலை மிரட்டல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் யாதென எதிர்க்கட்சியின் பிரதம கொரடா, அநுரகுமார திசாநாயக்க பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய போதே சபாநாயகர் இந்த விடயங்களைத் தெளிவுபடுத்தினார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்