காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அடுத்தகட்ட விசாரணை யாழில்

காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அடுத்தகட்ட விசாரணை யாழில்

காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அடுத்தகட்ட விசாரணை யாழில்

எழுத்தாளர் Staff Writer

11 Feb, 2016 | 12:54 pm

காணாமல் போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அடுத்தகட்ட சாட்சி விசாரணைகளை யாழ் குடாநாட்டில் முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, எதிர்வரும் 27, 28, 29 ஆம் திகதிகளிலும், மார்ச் முதலாம் திகதியும் சாட்சி விசாரணைகளை நடத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் எச்.டப்ளியூ குணதாச குறிப்பிட்டுள்ளார்.

கோப்பாய், வலி வடக்கு மற்றும் தெற்கு, சாவகச்சேரி, காரைநகர் மற்றும் நெடுந்தீவு ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் சாட்சி விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

மேலும், யாழ் குடாநாட்டில் கடந்த அமர்வில் கலந்துக் கொள்ளாத மதுரங்கேனி பிரதேச மக்களுக்கு கோப்பாய் பிரதேச செயலகத்தில் இடம்பெறவுள்ள அமர்வில் கலந்துக் கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழுவின் செயலாளர் குறிப்பிட்டார்.

குறிப்பாக யாழ் குடாநாட்டிலிருந்து கிடைத்துள்ள 12,000 முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஆயுட் காலம் எதிர்வரும் 15 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.

இந்நிலையில் ஆணைக்குழுவின் ஆயுட்காலத்தை நீடிப்பது குறித்து ஜனாதிபதிக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் சாதகமான பதில் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் ஆணைக்குழுவின் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்