அதிகாரத்தை நாட்டினது நன்மைக்காகப் பயன்படுத்த வேண்டியது அரசியல்வாதிகளின் பொறுப்பு – ஜனாதிபதி

அதிகாரத்தை நாட்டினது நன்மைக்காகப் பயன்படுத்த வேண்டியது அரசியல்வாதிகளின் பொறுப்பு – ஜனாதிபதி

எழுத்தாளர் Bella Dalima

11 Feb, 2016 | 9:29 pm

அதிகாரத்தால் அழிவைக் காணாமல் அதனை நாட்டினதும் மக்களினதும் நன்மைக்காக பயன்படுத்த வேண்டியது அரசியல்வாதிகளின் பொறுப்பு என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் இன்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைக் கூறினார்.

முன்னாள் ஜனாதிபதி காலஞ்சென்ற டி.பி விஜேதுங்கவின் உருவ ஓவியம் இன்று பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் திறந்து வைக்கப்பட்டது.

பாராளுமன்றத்தில் உள்ள பிரதமரின் அலுவலகத்திற்கு முன்பாக இந்த ஓவியம் வரையப்பட்டுள்ளது.

இதில் மக்கள் பிரதிநிதிகளும் முன்னாள் ஜனாதிபதி டி.பி விஜேதுங்கவின் உறவினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்