வெனிசுலாவில் பணவீக்கம் 720%

வெனிசுலாவில் பணவீக்கம் 720%

வெனிசுலாவில் பணவீக்கம் 720%

எழுத்தாளர் Staff Writer

10 Feb, 2016 | 11:56 am

தென் அமெரிக்க கண்டத்தின் வடபகுதியில் அமைந்துள்ள எண்ணெய் வளம் மிக்க வெனிசூலாவில் பணவீக்கம் 720 சதவீதத்தை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது உலகிலேயே மிக அதிகமான ஒன்றாக இருக்கும் என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

இங்கு கிடைக்கும் மசகு எண்ணெய் விலை நாளுக்கு நாள் கடுமையாக சரிந்து வருகிறது. இதுதான் இந்நாட்டின் முக்கிய பொருளாதார ஆதாரம்.

குடிநீரின் விலை தங்கத்தின் விலைபோன்று அதிகமாக உள்ளது. இதற்கும் மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாங்கி வருகின்றனர். கரும்பு பயிரிடப்பட்ட நிலங்கள் தரிசாக மாறியுள்ளன. பால் பண்ணைத் தொழிலும் முடங்கியுள்ளது.

இந்த ஆண்டு பண வீக்கம் 720 சதவீதத்தை தொடும் என கணிக்கப்பட்டுள்ளதால், வெனிசுலாவின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

வரலாறு காணாத பண வீக்கத்தை தொடர்ந்து, எண்ணெய் உற்பத்தி நாடுகளின் பிரதிநிதிகளை வெனிசுலாவின் அமைச்சர் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து வெனிசுலாவை காப்பாற்ற, மசகு எண்ணெய் விலையை உயர்த்த இந்நாடுகள் முன்வர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. இதையடுத்து உற்பத்தியை குறைக்கலாமா என ஒபெக் நாடுகள் திட்டமிட்டு வருகின்றன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்