மாதவன் இனி அங்கு போகக்கூடாது – மணிரத்னம்

மாதவன் இனி அங்கு போகக்கூடாது – மணிரத்னம்

மாதவன் இனி அங்கு போகக்கூடாது – மணிரத்னம்

எழுத்தாளர் Bella Dalima

10 Feb, 2016 | 4:34 pm

மணிரத்னத்திடம் உதவியாளராக இருந்த சுதா எனும் பெண்ணின் இயக்கத்தில், மாதவன் நடிப்பில் உருவாகி பெரும் வெற்றியைக் கண்டிருக்கிறது இறுதிச்சுற்று.

இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு பாராட்டாதவர்கள் இல்லை எனக்கூறலாம்.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன் இப்படத்தைப் பார்த்த மணிரத்னம், தன்னிடம் உதவி இயக்குனராக இருந்த சுதா தற்போது தனக்கென ஒரு தனித்துவத்தைப் பெற்றுவிட்டார் எனக்கூறி பாராட்டியுள்ளார்.

அது மட்டுமல்லாது, மாதவன் இனி தமிழ் படங்களில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

மாதவன் கடந்த 4 வருடங்களாக தமிழில் நடிக்காமல் வட இந்தியப் படங்களில் கவனம் செலுத்தி வந்தார்.

மேலும், ரித்திகாவின் நடிப்பு மிகவும் யதார்த்தமாக இருந்தது எனவும் முதல் படம் போன்றே தெரியவில்லை எனவும் கூறியுள்ள மணிரத்னம், இப்படக்குழுவினர்கள் அனைவரும் உடனே அடுத்த படத்தைத் தொடங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்