இந்திய சந்தையில் வரலாறு காணாத அளவு தங்கத்தின் விலை உயர்வு

இந்திய சந்தையில் வரலாறு காணாத அளவு தங்கத்தின் விலை உயர்வு

இந்திய சந்தையில் வரலாறு காணாத அளவு தங்கத்தின் விலை உயர்வு

எழுத்தாளர் Bella Dalima

10 Feb, 2016 | 4:04 pm

தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு உயர்வடைந்துள்ளது.

இதனால், மும்பை சந்தையில், 10 கிராம் தூய தங்கத்தின் விலை இந்திய ரூபா. 28,780 ஆக உயர்ந்துள்ளது. இதே போன்று வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது.

சென்னையில் 22 கேரட் தங்கத்தின் விலை (10 கிராம்) இந்திய ரூபா. 26,320 ஆகவும், 24 கேரட் தங்கத்தின் விலை (10 கிராம்) இந்திய ரூபா. 28,149 ஆகவும் இருந்தது.

திருமணக்காலம் என்பதால் தான் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

கடந்த 2015 ஆம் ஆண்டுக்குப் பின்பு இந்த அளவு விலை உயர்ந்துள்ளமை இதுவே முதல் முறை ஆகும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்