இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வேகத்தில் சாதகமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன – சர்வதேச நாணய நிதியம்

இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வேகத்தில் சாதகமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன – சர்வதேச நாணய நிதியம்

இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வேகத்தில் சாதகமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன – சர்வதேச நாணய நிதியம்

எழுத்தாளர் Staff Writer

06 Feb, 2016 | 8:24 am

இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வேகத்தில் சாதகமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் சிலர், நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவை நேற்று (06) அமைச்சில் சந்தித்து கலந்துரையாடிய போதே இந்த தகவலை கூறியுள்ளனர்.

இலங்கையின் பொருளாதார நிலைமைகள் குறித்து பின்னணி தகவல்களை திரட்டுவதற்காக நாட்டிற்கு வந்துள்ள சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள் தங்களின் விஜயத்தின் ஒரு கட்டமாக நிதியமைச்சரை சந்தித்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிப் பணிப்பாளர் உள்ளிட்ட சிலரே இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

உலக பொருளாதார நிலைமைகளுக்கு ஏற்ப இலங்கையின் பொருளதாரத்தைப் பராமரிப்பதற்காக முன்னெடுக்கப்பட வேண்டிய செயற்பாடுகள் குறித்து இந்த சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்