போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய இலங்கையர் இருவர் இந்தியாவில் கைது

போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய இலங்கையர் இருவர் இந்தியாவில் கைது

போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய இலங்கையர் இருவர் இந்தியாவில் கைது

எழுத்தாளர் Staff Writer

03 Feb, 2016 | 2:12 pm

போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய இலங்கை பிரஜைகள் இருவர் உள்ளிட்ட ஐவர்
தமிழகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள் மற்றும் தங்க விற்பனை தொடர்பில் மேலும் இரண்டு சந்தேகநபர்களை தேடி விசார​ணைகள் முன்னெடுக்கப்படுவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து சுமார் 20 கிலோகிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட இரண்டு இலங்கை பிரஜைகள் உள்ளிட்ட ஐவரையும் சென்னை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதன் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

தலைமன்னாரைச் சேர்ந்த இருவரே தமிழகத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்