பிளாஸ்டிக் பையில் ஜெர்ஸி அணிந்து கால்பந்து விளையாடிய சிறுவனைக் காண மெஸ்ஸி ஆர்வம் (Photos)

பிளாஸ்டிக் பையில் ஜெர்ஸி அணிந்து கால்பந்து விளையாடிய சிறுவனைக் காண மெஸ்ஸி ஆர்வம் (Photos)

பிளாஸ்டிக் பையில் ஜெர்ஸி அணிந்து கால்பந்து விளையாடிய சிறுவனைக் காண மெஸ்ஸி ஆர்வம் (Photos)

எழுத்தாளர் Bella Dalima

03 Feb, 2016 | 4:08 pm

அர்ஜென்டினா கால்பந்து அணியின் ஜெர்ஸிக்கு பதிலாக பிளாஸ்ட்டிக் பையில் மெஸ்ஸி 10 என எழுதி கால்பந்து விளையாடிய சிறுவனைக் காண லயனல் மெஸ்ஸி விரும்புவதாக ஆப்கானிஸ்தான் கால்பந்து சங்கம் அறிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானின் காபுல் அருகேயுள்ள ஜகோரி என்ற கிராமத்தைச் சேர்ந்த 5 வயது சிறுவன் முர்டஸா அகமதி.

கால்பந்தில் ஆர்வம் கொண்ட முர்டஸாவிற்கு வறுமை காரணமாக அவன் கேட்டது போல மெஸ்ஸியின் ஜெர்ஸியை வாங்கித்தர அவனது தந்தையால் இயலவில்லை.

இதனால் முர்டஸாவின் மூத்த சகோதரன் ஹோமயூன், பிளாஸ்டிக் பையில் அர்ஜென்டினா கால்பந்து அணியின் ஜெர்ஸியைப் போன்று நீலம் மற்றும் வெள்ளை நிறத்தை வரைந்து அதில் மெஸ்ஸி 10 என எழுதிக் கொடுத்துள்ளார்.

அகமதி அந்த ஜெர்ஸி அணிந்து கால்பந்து விளையாடுவது போன்ற படங்கள் கடந்த மாதம் முகநூலில் வெளியாகி பரவலாகப் பகிரப்பட்டு வந்தது.

இதைப்பார்த்த மெஸ்ஸின் தந்தை ஜோர்ஜ் மெஸ்ஸி, சிறுவன் முர்டஸா அகமதிக்கு உதவி செய்ய விரும்புவதாக தெரிவித்தார்.

இந்நிலையில், சிறுவன் முர்டஸா அகமதியை சந்திக்க லயனல் மெஸ்ஸி ஆர்வமாக உள்ளதாகவும் இவர்கள் சந்திப்பு விரைவில் நடைபெறும் எனவும் ஆப்கானிஸ்தான் கால்பந்து சங்கம் அறிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளின் தாக்குதல் அச்சுறுத்தல் நிலவுவதால் ஐரோப்பிய நாடுகளில் சிறுவனுடனான சந்திப்பை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

 

del8399964 image

1441

CaLpwZbUMAATqSC

f8ecc407afd547a882fbcca60feecd5d_18


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்