இளைஞர்களுக்கு தட்டுப்பாடு: ரோபோக்களை விவசாயப் பண்ணைகளில் களமிறக்கவுள்ளது ஜப்பான்

இளைஞர்களுக்கு தட்டுப்பாடு: ரோபோக்களை விவசாயப் பண்ணைகளில் களமிறக்கவுள்ளது ஜப்பான்

இளைஞர்களுக்கு தட்டுப்பாடு: ரோபோக்களை விவசாயப் பண்ணைகளில் களமிறக்கவுள்ளது ஜப்பான்

எழுத்தாளர் Bella Dalima

03 Feb, 2016 | 4:28 pm

ரோபோ தொழிலாளர்களைக் கொண்ட விவசாயப் பண்ணையை உருவாக்க ஜப்பான் திட்டமிட்டுள்ளது.

இந்தப் பண்ணையில் விதைக்கும் வேலை மட்டுமே மனிதனுடையது. ஏனைய வேலைகள் அனைத்தையுமே ரோபோக்கள் செய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

4,400 சதுர அடியில் உருவாகவுள்ள இந்த விவசாயப் பண்ணை அடுத்த ஆண்டு செயற்பாட்டுக்கு வரவுள்ளது.

ஜப்பானில் இளைஞர்களின் எண்ணிக்கை கணிசமான அளவு குறைவடைந்துள்ளது. இதனால், அங்கு தொழிலாளர்களுக்கான தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது.

எனவே, ரோபோ தொழிலாளர்களைக் களமிறக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது ஜப்பான்.

2035 ஆம் ஆண்டிற்குள் ஜப்பானில் சரிபாதி ரோபோ தொழிலாளர்கள் உருவெடுக்கும் சாத்தியம் நிலவுகிறது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்