அமெரிக்க பங்குச்சந்தையில் அப்பிளை பின்னுக்குத் தள்ளிய கூகுள் ஆல்பபெட்

அமெரிக்க பங்குச்சந்தையில் அப்பிளை பின்னுக்குத் தள்ளிய கூகுள் ஆல்பபெட்

அமெரிக்க பங்குச்சந்தையில் அப்பிளை பின்னுக்குத் தள்ளிய கூகுள் ஆல்பபெட்

எழுத்தாளர் Bella Dalima

02 Feb, 2016 | 4:28 pm

பங்குகளின் அடிப்படையில், அமெரிக்காவின் மதிப்புமிக்க நிறுவனமாக கூகுளின் ஆல்பபெட் உயர்ந்துள்ளது.

கடந்த 4 வருடங்களாக முதலிடத்தில் இருந்த அப்பிள் நிறுவனம் இதனால் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது.
ஸ்மார்ட்போன் தயாரிப்பில் முன்னணியிலுள்ள அப்பிள் நிறுவனத்தோடு, கூகுள் இணைந்து ஆபரேட்டிங் சிஸ்டத்தினை உருவாக்கி வந்தது. ஆனால், 2008 இல் கூகுள் தனது சொந்த மொபைல் தயாரிப்பை சந்தைப்படுத்தியபோது, அப்பிளுடனான நட்பில் விரிசல் ஏற்பட்டது.

இந்நிலையில், நியூயார்க் பங்குச்சந்தையில், திங்கட்கிழமை வர்த்தகம் முடிவடையும் வேளையில் ஆல்பபெட் நிறுவனப் பங்குகளின் மதிப்பு 568 பில்லியன் அமெரிக்க டொலர் என்ற அளவில் உயர்வடைந்திருந்தது. அப்பிளின் பங்கு மதிப்பு 535 பில்லியன் டொலர் என்ற அளவில்தான் இருந்தது.

எனவே, 4 வருடங்களாக பங்குச்சந்தை மதிப்பில் முதலிடத்தில் இருந்து வந்த அப்பிள் நிறுவனம் முதல் முறையாக பின்னுக்குத் தள்ளப்பட்டு ஆல்பபெட் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

அப்பிள் நிறுவனத்தின் ஸ்மார்ட் போன்கள் விற்பனை சீனாவில் குறைந்துள்ளது. புதிய தொழில்நுட்பங்களுடன் அப்பிள் நிறுவனம் போன்களை அறிமுகம் செய்யும் திட்டம் எதுவும் கொண்டிருக்கவில்லை. இதுபோன்ற காரணங்களால் அப்பிளின் பங்கு மதிப்பு குறைந்துள்ளதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்