ஷிரந்தி ராஜபக்ஸ பாரிய ஊழல் மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன் ஆஜர்

ஷிரந்தி ராஜபக்ஸ பாரிய ஊழல் மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன் ஆஜர்

ஷிரந்தி ராஜபக்ஸ பாரிய ஊழல் மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன் ஆஜர்

எழுத்தாளர் Staff Writer

01 Feb, 2016 | 1:13 pm

முன்னாள் ஜனாதிபதியின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஸவை பாரிய ஊழல் மோசடி தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு இன்று அழைக்கப்பட்டுள்ளார்.

கடந்த அரசாங்கத்தின் போது ஊடக ஆலோசகர் செயற்பட்ட ஒருவருக்கு குறைந்த மதிப்பீட்டில் வீடொன்று பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளதாக தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடு குறித்தே ஷிரந்தி ராஜபக்ஸவிடம் இன்று வாக்குமூலம் பதிவு செய்யப்படவுள்ளதாகவும் ஆணைக்குழுவின் செயலாளர் கூறினார்.

கஹதுடுவ பிரதேசத்திலுள்ள குறித்த வீடு 5 இலட்சம் என குறிப்பிடப்பட்டுள்ள போதிலும் அந்த வீட்டின் உண்மை பெறுமதி 55 இலட்சம் ரூபா என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்