யுத்தத்தின் தாக்கத்திலிருந்து விடுபடமுடியாது போராடும் கனகையா கயந்தினி

யுத்தத்தின் தாக்கத்திலிருந்து விடுபடமுடியாது போராடும் கனகையா கயந்தினி

யுத்தத்தின் தாக்கத்திலிருந்து விடுபடமுடியாது போராடும் கனகையா கயந்தினி

எழுத்தாளர் Staff Writer

01 Feb, 2016 | 8:30 pm

யுத்தம் முடிவுற்று பலவருடங்கள் கடந்தாலும் அதன் தாக்கத்தில் இருந்து விடுபடமுடியாத பலரை இன்னும் எம்மத்தியில் வாழ்ந்து வருகின்றனர்.

புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்ட முன்னாள் போராளிகளின் நிலையும் அதற்கு உதாரணமாக அமைந்துள்ளது.

மன்னார் மடு பிரதேச செயலகப் பிரிவின் இரணைஇழுப்பைக் குளத்தில் வசித்து வருகின்றார் 23 வயதான கனகையா கயந்தினி.

மூன்று பிள்ளைகளை கொண்டு குடும்பத்தின் மூத்தமகளான இவர் 2010 ஆம் ஆண்டு குடும்பத்தாருடன் இணைந்து வாழ்வதற்கான சந்தர்ப்பத்தை பெற்றார்.

இந்திய வீட்டுத் திட்டத்தின்கீ்ழ் வழங்கப்பட்ட பகுதி அளவில் பூரணப்படுத்தப்பட்ட வீட்டில் வசித்து வருகின்றார் கயந்தினி.

உடல் நலக் குறைவால் அவதியுறும் தாய் கூலில் தொழில் செய்யும் தந்தை மற்றும் இரண்டு தம்பிமாரின் நலனுக்காக இவர் கூலி வேலைக்கு போவதாக கூறுகின்றார்.

அதிகாரிகள் வாக்களித்தவாறு 3,000 ரூபா மாதாந்தக் கொடுப்பனவோ அல்லது கடன் உதவிகளோ கிடைக்காத நிலையில் கயந்தினியின் குடும்பத்தார் இன்றும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர்

கொள்கைக்காக போராடி தற்போது சிவில் சமூகத்தில் இணைந்து வாழ்ந்து வருகின்ற முன்னாள் போராளிகள் தொடர்பில் அதிகாரிகள் அசமந்தப் போக்குடன் செயற்படுவதையே இவரது வாழ்க்கையும் உணர்த்துகின்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்