மின்னணு கழிவுகளில் இருந்து 10 வினாடிகளில் தங்கத்தை பிரித்தெடுக்கும் புதிய முறை கண்டுபிடிப்பு

மின்னணு கழிவுகளில் இருந்து 10 வினாடிகளில் தங்கத்தை பிரித்தெடுக்கும் புதிய முறை கண்டுபிடிப்பு

மின்னணு கழிவுகளில் இருந்து 10 வினாடிகளில் தங்கத்தை பிரித்தெடுக்கும் புதிய முறை கண்டுபிடிப்பு

எழுத்தாளர் Staff Writer

01 Feb, 2016 | 11:17 am

ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 50 மில்லியன் டன் மின்னணு கழிவுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன இவற்றில் 80 சதவீதம் மறுசுழற்சி செய்யப்படாமல் திறந்த வெளியில் வீசப்படுகின்றன இவை பூமியின் சுற்றுசூழகுக்கு மிகப் பெரிய ஆபத்தாக மாறி வருகின்றன.

கனிணி, மொபையில் போன்கள், வயர்கள் போன்ற மின்னணு கழிவுகளில் இருந்து தங்கத்தை பிரிதெடுக்க தற்போது நடைமுறையில் உள்ள முறை அதிக செலவு பிடிப்பதாகவும், சுற்றுசூழக்கு கேடு விளைவிப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில் கனடாவில் உள்ள சஸ்காச்சுவான் பல்கலைக்கழக பேராசிரியர் ஸ்டீபன் போலேவும் அவரது மாணவி ஒருவரும் இணைந்து புதிய முறை ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.

இந்த முறைப்படி சில வேதிப்பொருட்களை சேர்ந்து உருவாக்கப்படும் அமிலக் கரைசல்களில் மின்னணு கழிவுகளை அமிழ்த்தும் போது 10 வினாடிகளில் தங்கம் மட்டும் தனியாக பிரிந்து வந்துவிடுகிறது. ஒரு கிலோ தங்கத்தை பிரித்து எடுக்க 100 லிட்டர் அமிலக் கரைசல் போதுமானது. மேலும் இந்த அமிலக் கரைசலை மறுசுழற்ச்சி செய்யமுடியும்.

ஆனால் தற்போது பின்பற்றப்படும் முறையில் ஒரு கிலோ தங்கத்தை பிரித்தெடுக்க 5000 லிட்டர் அமிலக் கரைசல் தேவை. ஆனால் இந்த அமிலக் கரைசலை மறுசுழற்சி செய்ய முடியாது.

இந்த புதிய கண்டுபிடிப்பு வணிக ரீதியாக நடைமுறைக்கு வரும் போது உலக தங்க வர்த்தகம் பெரிய மாற்றங்களை சந்திக்கும்.

அதை விட முக்கியமான விடயம் தங்கத்தை வெட்டி எடுப்பதற்காக காடுகள் அழிக்கபடுவதும், சுரங்கம் தோண்டப்படுவது குறைந்துவிடும் என்று பேராசிரியர் ஸ்டீபன் போலே தெரிவித்துள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்