தமிழீழ விடுதலைப்புலிகளின் செயற்பாட்டாளர் எமில் காந்தனுக்கு எதிரான பிடியாணை இரத்து

தமிழீழ விடுதலைப்புலிகளின் செயற்பாட்டாளர் எமில் காந்தனுக்கு எதிரான பிடியாணை இரத்து

தமிழீழ விடுதலைப்புலிகளின் செயற்பாட்டாளர் எமில் காந்தனுக்கு எதிரான பிடியாணை இரத்து

எழுத்தாளர் Staff Writer

01 Feb, 2016 | 9:56 pm

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முக்கிய செயற்பாட்டாளர்களில் ஒருவரான எமில் காந்தனுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டிருந்த பிடியாணை மற்றும் சிவப்பு எச்சரிக்கை ஆகியவற்றை ரத்து செய்து கொழும்பு விசேட மேல்நீதிமன்ற ஆணையாளர் ஐராங்கனீ பெரேரா உத்தரவிட்டுள்ளார்.

எமில் காந்தன் நீதிமன்றத்தில் சரணடைய எதிர்பார்த்துள்ளதாக அவரது சட்டத்தரணி முன்வைத்த கருத்துக்களை ஆராய்ந்து விசேட மேல் நீதிமன்றத்தின் ஆணையாளர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

தற்போது வௌிநாட்டில் வசித்து வரும் எமில்காந்தன் நாடு திரும்புவதற்கு ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டுள்ள பிடியாணை மற்றும் சர்வதேச பொலிஸாரின் ஆணை என்பன தடையாக உள்ளதென சட்டத்தரணி நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்த வழக்கு மீதான விசாரணை எதிர்வரும் 24 ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்