டி20 உலகக் கிண்ணத்திற்கான நியூசிலாந்து அணியின் விபரம் அறிவிப்பு

டி20 உலகக் கிண்ணத்திற்கான நியூசிலாந்து அணியின் விபரம் அறிவிப்பு

டி20 உலகக் கிண்ணத்திற்கான நியூசிலாந்து அணியின் விபரம் அறிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

01 Feb, 2016 | 2:57 pm

6 ஆவது 20 ஓவர் உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி இந்தியாவில் மார்ச் 8 ஆம் திகதி முதல் ஏப்ரல் 3 ஆம் திகதி வரை இடம்பெறுகின்றது. இந்த போட்டித்தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கேன் வில்லியம்சன் தலமையிலான நியூசிலாந்து அணியில் மூன்று சுழற்பந்து வீச்சாளர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

போட்டித்தொடர் இந்தியாவில் நடைபெறுவதால், அதன் சூழலுக்கு ஏற்றாற்போல், மூன்று முன்ணணி சுழற்பந்து வீச்சாளர்களுக்கு அணியில் இடம் அளிக்கப்பட்டுள்ளதாக நியூசிலாந்து அணியின் பயிற்சியாளர் மைக் ஹெஸ்ஸன் தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்து அணியில் இடம் பெற்றுள்ள 15 வீரர்களின் விவரம் வருமாறு:-

கேன் வில்லியம்சன்(அணித்தலைவர்), கோரி அண்டர்சன், ட்ரெண்ட் போல்ட், கிராண்ட் எலியட், மார்டின் கப்டில், அடம் மிலன், மிட்செல் மெக்லெகன், கொலின் முன்ரோ,நதன் மக்கலம், ஹென்ரி நிகலொஸ், லூக் ரொஞ்சி, மிட்செல் சண்ட்டர், சோதி, டிம் சௌதி, ரோஸ் டெய்லர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்