சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர் மீது தாக்குதல் நடத்தியமை தொடர்பில் நால்வர் கைது

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர் மீது தாக்குதல் நடத்தியமை தொடர்பில் நால்வர் கைது

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர் மீது தாக்குதல் நடத்தியமை தொடர்பில் நால்வர் கைது

எழுத்தாளர் Staff Writer

01 Feb, 2016 | 2:25 pm

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் இரண்டு மாணவர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெலிஹுல்ஓய பகுதியை சேர்ந்த நான்கு பேரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

பம்பஹின்ன பகுதியில் நேற்றிரவு10.30 அளவில் இடம்பெற்ற வாய்த்தர்க்கத்தின் போது குறித்த இரண்டு மாணவர்கள் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தாக்குதலில் காயமடைந்த மாணவனொருவன் பம்பஹின்ன கிராமிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

சப்ரகமுவ பல்கலைகழகத்தின் புவிசரிதவியல் கற்கை பிரிவின் மூன்றாம் வருட மாணவர்கள் மீதே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள நான்கு சந்தேகநபர்களையும் பலாங்கொடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்