ஒழுக்காற்று விசாரணை தொடர்பில்  ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகளுக்கு கடிதம்

ஒழுக்காற்று விசாரணை தொடர்பில் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகளுக்கு கடிதம்

ஒழுக்காற்று விசாரணை தொடர்பில் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகளுக்கு கடிதம்

எழுத்தாளர் Staff Writer

01 Feb, 2016 | 7:32 pm

ஒழுக்காற்று விசாரணை மேற்கொள்ளாமல் இருப்பதற்கு காரணங்களை கேட்டறியும் வகையில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள் சிலருக்கு கட்சியின் செயலாளர் கடிதம் அனுப்பியுள்ளார்.

புதிய கட்சி தொடர்பில் கருத்து வௌியிட்ட பிரதேச அரசியல்வாதிகளே இவ்வாறு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்கவின் கையொப்பத்துடன் இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 14 ஆம் திகதி கொழும்பில் உள்ளூராட்சி மன்ற பிரதானிகள் சிலரின் பங்குபற்றலுடன் நடைபெற்ற ஊடக சந்திப்பில் தெரிவிக்கப்பட்ட கருத்துகள் தொடர்பில் கட்சி விளக்கம் கோரியுள்ளது.

வேறொரு கூட்டமைப்பில் போட்டியிடுவதாக மக்களுக்கு கருத்து வௌியிட்டமை, ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், கட்சியின் யாப்பிற்கும் முரணானது என அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டப்பட்டுள்ளது.

அதன்படி 14 நாட்களில் இதற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு தமது விளக்கத்தை வழங்குமாறும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் கட்சியின் உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள் சிலருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்