இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கான விலை அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கான விலை அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கான விலை அதிகரிப்பு

எழுத்தாளர் Staff Writer

01 Feb, 2016 | 7:13 am

இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கான விலை நேற்று (31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இறக்குமதி செய்யப்படும் ஒருகிலோ அரிசியின் விலை 30 ரூபாவிலிருந்து 50 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

நாட்டில் போதியளவு அரிசி கையிருப்பில் இருப்பதனால், இதனை கருத்திற்கொண்டு இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ அரிசிக்கான துறைமுக வரியை 30 ரூபாவிலிருந்து 50 ரூபாவாக அதிகரித்துள்ளதாக நிதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் மூலமாக நாட்டில் நெல் உற்பத்தியை அதிகரிப்பதற்கு, விவசாயிகளை ஊக்குவிக்க முடியும் என்பதாலும்,உள்ளநாட்டு உற்பத்தி போதியளவு இருப்பதனால் இறக்குமதியை கட்டுப்படுத்துவதற்காக வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க சுட்டிக்காட்டினார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்