ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற படகு விபத்திற்குள்ளானதில் 5 மீனவர்களை காணவில்லை

ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற படகு விபத்திற்குள்ளானதில் 5 மீனவர்களை காணவில்லை

ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற படகு விபத்திற்குள்ளானதில் 5 மீனவர்களை காணவில்லை

எழுத்தாளர் Staff Writer

01 Feb, 2016 | 9:36 am

ஹிக்கடுவ களப்பினூடாக ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற படகொன்று விபத்துக்குள்ளாகியதில் 5 மீனவர்கள் காணாமற்போயுள்ளனர்.

கடந்த 28 ஆம் திகதி 6 பேருடன் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற படகொன்று நேற்று (31) கப்பலொன்று மோதி விபத்திற்குள்ளாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

குறித்த படகிலிருந்து ஒருவர் மாத்திரம் கடலில் தத்தளித்தப் போது மற்றுமொரு படகு மூலம் தப்பி வந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

படகு விபத்தில் காணாமற்போனவர்கள் ஹிக்கடுவ மற்றும் தொடங்துவ பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹிக்கடுவ பொலிஸார் இந்த படகு விபத்து குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்